Ads (728x90)

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 மீனவர்கள் மீதும் மனிதாபிமான நடவடிக்கை அவசியம் என இந்தியா தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பரப்புகளில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து 5 படகுகளுடன் 54 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் மனிதாபிமான  நடவடிக்கை அவசியமென தெரிவித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படையால் நேற்றைய தினம் இரவு 5 படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு உடனடி தூதரக அணுகல் மற்றும் அவசரகால பொருட்களை வழங்குவது முக்கியமானது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தூதரக உதவிகளையும் அவசர உதவிகளையும் விரைவாக வழங்குவதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மீன்பிடித்துறை தொடர்பான அனைத்து விடயங்களையும் விரிவாகக் கையாள இருதரப்பு வழிமுறைகள் உள்ளன. இது தொடர்பான 4 ஆவது கலந்துரையாடலொன்று மெய்நிகர் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்டையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget