1990 ஆம் ஆண்டின் பின்னர் துப்புரவு செய்யப்படாத ஸ்டான்லி வீதியிலிருந்து கடற்கரை வரை செல்லும் இரண்டு கிலோ மீட்டர் நீளமுடைய குறித்த பிரதான வாய்க்கால் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையின் சுகாதார பணியாளர்களால் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகரின் குறித்த பிரதான வாய்க்கால் யாழ். நகரின் மத்தியின் ஊடாக கடைகள் வீதியின் கீழாக செல்கின்றது.
இந்த துப்பரவு பணி மிக கடினமானதாக இருப்பதனால் மாநகர சபையின் நோயாளர் காவு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பித்திருக்கின்ற இந்த துப்பரவு பணி இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post a Comment