இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும், இன்ட்ஶ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறவனத்திற்கும் இடையில் கைச்சாத்தானது.
இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீப்குமார் குப்தா மற்றும் இன்ட்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்!
இரு நாடுகளுக்கிடையிலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக தொடங்கியதும் இந்த சேவையை விரைந்து ஆரம்பிக்க இருப்பதாக நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Post a Comment