திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டதோடு, இலங்கை - இந்திய மக்களின் நலனுக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார்.
அத்துடன் இந்திய உதவி திட்டத்தின் கீழ் 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலயத்தில் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் யாழ். நல்லூருக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்ட உயர்ஸ்தானிகர், நல்லை ஆதீனத்தையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
காங்கேசன்துறை துறைமுகத்தை காரைக்காலுடன் இணைக்கும் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்தை 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியாவுடனான திட்டமிட்ட விமானங்களுக்காக இலங்கை தனது வான்வௌியை மீண்டும் திறக்கும் போது பலாலிக்கான விமான சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார உந்து சக்திக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கோரியுள்ளதாகவும், அது தொடர்பில் தற்போது பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

Post a Comment