Ads (728x90)

முடிவடைந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதரப்பத்திர சாதாரணத்தர பரீட்சை பெபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரணத்தர பரீட்சையானது 2021 மார்ச் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடாத்தப்பட்ட க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கு 6,22,000 பேர் தோற்றியிருந்தனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் 56 பேர் கொரோனா தொற்று காரணமாக, 40 விசேட மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதியிருந்துடன் தனிமைப்படுத்தப்பட்ட 322 பேர் பரீட்சை மத்திய  நிலையத்தில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வகுப்புக்களில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

க.பொ.த. சாதாரணத்தர பரீட்சையின் பரீட்சை முடிவுகள் எதிர்வரும்  ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சர், க.பொ.த. உயர் தரப் பிரிவுக்கு தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும்,  அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


Post a Comment

Recent News

Recent Posts Widget