Ads (728x90)

கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 09 மணிக்கு இரணைமாதா நகர் கடற்கரையில் பொதுமக்களால் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் தொடர்பில் இரணைதீவு அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் தெரிவித்ததாவது, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களுடைய சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசு எடுத்த தீர்மானம் வேதனையைத் தருகின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எதிர்க்கிறோம். பல துன்பங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் இங்கு மக்கள் குடியமர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இன்னும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இங்கு 100 க்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில் இந்த கிராமத்தில் இந்த செயலை செய்யும் தீர்மானத்தை அரசு எடுத்தது கவலை அழிக்கின்றது.

இது நீரோட்டம் நிறைந்த தீவு. இங்கு சடலங்களை அடக்கம் செய்யும் போது தொற்று இலகுவாக பரவுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதை அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை. மேலும் இங்கு 135 கடல் அட்டை பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் அடக்கம் செய்வது ஏற்புடையதில்லை.

இது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான போராட்டம் இல்லை. அவர்கள் குறித்த விடயத்துக்கென பல இடங்களை முன்மொழிந்துள்ளனர். ஆனால் அவர்கள் கோரிய இடத்தை விட்டுவிட்டு இரணைதீவை அரசு தீர்மானத்தமை கவலையளிக்கிறது. இதை முற்றாக எதிர்க்கிறோம்.

இந்த முயற்சியை அரசு நிறுத்தாவிட்டால் எமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுககப்படும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget