Ads (728x90)


தீவகத்தில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றை தீவகத்தில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கில் போக்குவரத்து சேவைக்கான குழுவை விரைவில் அமைத்து, அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும், கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget