யாழ். நகரில் நேற்றய தினமும் 77 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை கூடிய மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணியினர் நகரின் ஒரு பகுதியை முடக்கி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதுடன், நகரின் மத்திலியிருந்து போக்குவரத்து சேவைகளை கோட்டை சுற்றாடலுக்கு மாற்றுவதற்கு தீர்மானித்திருந்தனர்.
எனினும் இன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பணிகள் இடம்பெற்றது. இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் மாவட்ட செயலணியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தாங்கள் நகரின் மத்தியிலிருந்து வெளியேறப்போவதில்லை என இ.போ.சபையினர் தெரிவித்துள்ளனர். இ.போ.ச தொடர்ந்தும் மறுத்தால் பேருந்து நிலையத்திற்கு சீல் வைக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Post a Comment