Ads (728x90)

காலிபிளவரில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இது இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுப்பதோடு இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

காலிபிளவரில் கோலைன் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் டி சத்தை  சேர்ந்ததாகும். கோலைன் சத்து மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது.

காலிபிளவரில் பியூரின் என்ற வேதிப்பொருளும் அதிகம் இருக்கின்றன. உடலின் மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்டவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் அவர்களின் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது.

காலிபிளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின்  சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

காலிபிளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

காலிபிளவரை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget