Ads (728x90)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானிக்கு அமைவான வழிகாட்டிகளை வகுப்பதில் ஈடுபட்டுள்ள குழுவினர் அது தொடர்பாக அறிவிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இதனை தெரிவித்தார்,

இரணைத்தீவு, புத்தளம், ஓட்டமாவடி, புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget