Ads (728x90)

புர்கா அணிவதை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையெழுத்திட்டுள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் புர்கா அணியும் செயற்பாடானது தேசிய பாதுகாப்புக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு புர்கா அணிவதை தடைசெய்வதற்கான பரிந்துரையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget