வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இதன்படி தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வரும் பயணிகள் நாட்டிற்கு வந்து பிசிஆர் பரிசோதனைக்குட்பட்டு 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்று வீட்டிற்கு செல்லலாம்.
அதற்கமைய தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இரு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளிடம் உரிய சான்று பத்திரத்தை காண்பிக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக் கொண்டமைக்கான சான்று பத்திரம் ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரை பயணிகள் தனிமைப்படுத்தல் மையம் அல்லது தனிமைப்படுத்தல் ஹோட்டலில் தங்க வேண்டும். பின்னர் பயணிகள் வீட்டிற்கு பயணிக்க முடியும்.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அவர்களது போக்குவரத்தை அவர்கள் ஒழுங்கு செய்வதோடு, வீடு செல்லும் வரை உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு திரும்பும் நபர்கள் தங்களது பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு இவ்வாறு வீடு திரும்புபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டி அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் நாடு திரும்பி 07ஆவது நாளில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் இரண்டாவது பிசிஆர் பரிசோதனையினை மேற்கொண்டு அதன் அறிக்கையை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்க வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தடுப்பூசி போடப்படாத பயணிகளை ஏழு நாட்களுக்கு ஒரு தனிமைப்படுத்தல் மையம் அல்லது தனிமைப்படுத்தல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பயணிகள் மீது முதல் மற்றும் ஏழாம் நாளில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் அவர் ஏழாம் நாளில் வெளியேறலாம்.
தடுப்பூசி போடாத பயணிகள் 14 நாள் தனிமைப்படுத்தலின் மீதமுள்ள ஏழு நாட்களை அவர்களது பிரதேச சுகாதார அலுவலரின் மேற்பார்வையில் முடிக்க வேண்டும்.

Post a Comment