Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்திலிருந்து அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வடமாகாண காணி ஆவணங்கள் இன்று மீண்டும் யாழ்.செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள்  யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்தது. அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் மீண்டும் இன்று பிற்பகல் தமது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget