இப்போராட்டம் நேற்று காலை யாழ்.மாவட்ட செயலக வாயிலை மறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் எடுத்த மேற்படி தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடமாகாண காணி ஆவணங்களை அநுராதபுரத்துக்கு மாற்றுவதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்!
வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அநுராதபுர அலுவலகத்துக்கு மாற்றும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment