Ads (728x90)

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் மக்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்வதற்காக இரணைதீவுக்கு நேற்று கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு நேற்று பெருமளவானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களை மீறி அடக்கம் செய்ய முற்பட்டால் அது பெரும் கலவரத்தில் முடியும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை வழக்கத்துக்கு மாறாக அதிகளவு கடற்படையினரும் இரணைதீவில் களமிறக்கப்பட்டு சடலங்களைப் புதைக்க ஏதுவாக அங்கு குழிகள் தோண்டப்பட்டு தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அந்தக் குழிகளை மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

இந்நிலையில் தமது எதிர்ப்பை மீறி சடலங்களை எடுத்துவந்தால் அதனை உள்ளே அனுமதிக்காது முழு மூச்சாக எதிர்ப்போம் எனக் கூறி நேற்று முழு நாளும் அங்கு மக்கள் திரண்டுள்ளனர். 



Post a Comment

Recent News

Recent Posts Widget