Ads (728x90)

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.

இப்போராட்டத்தில் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget