Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தும் நாளைய தினமே மீண்டும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு மாற்றுவது தொடர்பான பிரச்சனை முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பில் உரிய அமைச்சரிடமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உடனடியாக கொண்டு சென்ற ஆவணங்களை மீள கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள் கொண்டு சென்ற கோப்புகள் யாழ்ப்பாணம் வருமா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்போது பதிலளித்த அமைச்சர் நாம் சொல்வதைத்தான் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம் எனப் பதிலளித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget