குறித்த தடை அமுலுக்கு வரும் தினம் மற்றும் தடை செய்யப்படும் பிளாஸ்டிக் வகைகள் தொடர்பில், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கடந்த ஜனவரி 21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய தடை செய்யப்படும் பொருட்களாவன,
வியாபாரம் அல்லது கைத்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விவசாய இரசாயன பொருட்களைப் பொதியிடுவதற்கான பொலி எதிலீன் டெரெப்தாலேட் அல்லது பொலிவைனல் குளோரைட்டு.
உணவுகள், மருந்துகள் தவிர்ந்த, 20 மி.லீ. அல்லது 20 கிராமிற்கு குறைவான அல்லது அதற்கு சமமான சிறு பிளாஸ்டிக் பொதிகள்.
காற்றடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் (பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய நீர் விளையாட்டுக்கான துணைப் பொருட்கள் தவிர்ந்த நீரில் விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்).
மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காது துடைப்பான் தவிர்ந்த, பிளாஸ்டிக் குச்சியினாலான காது துடைப்பான்கள்.

Post a Comment