Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த ஆண்டில் முதல் 03 மாதங்களில் மட்டும் 668 தொற்றாளர்கள் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மாகாணத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும்  தெரிவித்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget