Ads (728x90)

விடுதலைப்புலிகளையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் இணையத்தளம் ஒன்றையும், யூடியுப் சனல் ஒன்றையும் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாவலர் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளமும், யூடியுப் சனலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரைகள் மற்றும் அவர்களது படங்கள் மூலம் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை ஊக்குவித்தன என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இணையத்தளமும், யூடியுப் சனலும் சமூகங்களிற்கு இடையில் ஒற்றுமையின்மையை உருவாக்கின எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget