Ads (728x90)

சூயஸ் கால்வாயில் கடந்த 6 நாட்களாக சிக்கியிருந்த இராட்சத கொள்கலன் கொள்கலன்களை கொண்ட சரக்கு கப்பல் சற்று முன்னர் மீட்க்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினரால் இதை மீட்க முடிந்ததாக கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது.

எவர் கிறீன் (Ever Green) என்ற கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயல் கால்வாயின் சுவரில் மோதுண்டு சிக்கியதனால் உலகம் முழுவதுமான கப்பல் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக பரபரப்பான இந்தக் கால்வாயில் எவர் கிவென் என்ற இந்தக் கப்பல் வேறு எந்த கப்பலும் செல்ல முடியாத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் முழுமையாக அடைத்து நின்றது.

இந்தத் தடங்கலால் இரு மருங்கிலும் 200க்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியிருந்தன. சில கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி தமது பயணத்தை மேற்கொண்டன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கப்பல் நகர்வதற்கு வசதியாக கரைப் பகுதியில் உள்ள சுமார் 20,000 தொன் மணல் தோண்டி எடுக்கப்பட்டு 14 இழுவை படகுகள் மூலம் கப்பல் இழுக்கப்பட்டது.

எனினும் கடும் காற்று மற்றும் அலை இந்த முயற்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. எனினும் கப்பலை இரண்டு பக்கமாகவும் 30 பாகை அளவு நகர்த்துவதற்கு இழுவை படகுகளால் முடிந்தது. இந்த சிறிய வெற்றியை கொண்டாடும் வகையில் இழுவை படகுகள் ஒலி எழுப்பிய காட்சி ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 2,20,000 தொன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன. 

உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12 வீதம் சுயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது. இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது. 

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆபிரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். 

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றுள்ளன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51 கப்பல்கள் என்று சுயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.




Post a Comment

Recent News

Recent Posts Widget