Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தவிர்ந்த கத்தோலிக்க தேவாலயங்களின் முன்பாக எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து கத்தோலிக்கர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நாளை கருப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தும் முடிவை கர்தினல் மல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் ஆகியோர் மேற்கொண்டனர். தொடர்ந்து ஆராதனைகளின் பின்னர் போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கில் இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக யாழ். மறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget