Ads (728x90)

தலைமன்னார் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதமும், மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இன்று மதியம் 2.05 மணியளவில் விபத்திற்குள்ளாகின.



Post a Comment

Recent News

Recent Posts Widget