அக்கரப்பத்தன தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் சனத் விஜேவர்தன மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருமளவில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள் திடீரென அதிகரிப்பது தம்மை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்றும், தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கும்படி கோரியுள்ளனர்.

Post a Comment