2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரம், சாதாரணதரம் , தரம் 5 புலமை பரிசில் ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment