யாழ்.மாநகர முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு அதிகாலை நேரத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மேற்படி திட்டமிட்ட நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கின்றது. யாழ்.மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளை ஒத்ததாக மாநகர சபைகளுக்கான அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்த முயற்சிக்கின்றது.
அதனை முடக்குவதற்கே இவ்வாறான தடைகள் உண்டாக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு இந்த கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment