Ads (728x90)

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பால் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளை தற்போதைய அதிபர் ஜோ பிடன் திரும்ப பெற்றார்.

அமெரிக்காவில் வேறு நாட்டவர் நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கி பணிபுரிய எச்1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு, அமெரிக்காவில் வேலையிழப்பு ஆகியவற்றை காரணம் காட்டி அன்றைய அதிபர் ட்ரம்ப் எச்1பி விசா மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

ட்ரம்ப்பின் ஆட்சியில் வெளியுறவு கொள்கைகள் மோசமடைந்திருப்பதாக தெரிவித்திருந்த நடப்பு அதிபர் ஜோ பைடன் தான் அதிபர் ஆனதும் பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என கூறியிருந்தார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அவர் திரும்ப பெற்றுள்ளார். இதனால் பலர் நிம்மதியடைந்துள்ளனர். எச்1பி விசா மூலமாக இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக அமெரிக்காவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget