Ads (728x90)

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேறு இம்மாத  இறுதியில் வெளியிடப்படவுள்ளது. 

பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்கள் காலதாமதம் இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு  இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கண்டி கலகெதர பகுதியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாரச் மாதம் நடைபெற்று முடிந்த  2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு ஜூன் மாதம் வெளிவரும்.  உயர்தர கற்றல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும். காலதாமதமில்லாமல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget