சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய உணவுப் பொருட்களை பரிமாறுதல், தொழில் ஆரம்பித்தல், கைவிசேட நடவடிக்கைகள், எண்ணெய் தேய்த்து குளித்தல் போன்ற செயற்பாடுகளை வீடுகளுக்குள்ளேயே முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதாயின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உறவினர் வீடுகளுக்கு செல்வதையும், இனிப்பு பண்டங்கள் பரிமாறுவதையும், அயலவர்களுடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதையும் இயலுமானவரை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தவிர சைக்கிளோட்ட போட்டிகள், மரதனோட்ட போட்டிகள், கயிறு இழுத்தல், கண்களைக் கட்டி பானை உடைக்கும் போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் போது போட்டி வீரர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளின் போது சமூக இடைவௌியை பேணுதல், கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற விடயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களின் போது 100 இற்கும் குறைவான நபர்களே பங்குபற்ற வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment