கனடாவில் கடந்த மூன்று தொடக்கம் நான்கு வாரங்களில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒன்ராறியோ அரசாங்கம் “மாகாணம் தழுவிய அவசரகால தடுப்பு” என்ற பெயரிலான முடக்க நிலையை அறிவித்துள்ளது. இந்த முடக்க நிலை குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உணவகங்கள் அனைத்திலும் உணவருந்தலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்படும்.
அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் 50 சதவீத கொள்ளளவுடனும், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் 25 சத வீத கொள்ளளவுடனும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment