Ads (728x90)

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட காவல் படையின் கடமைகள் பொலிஸாரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபையினால்  உருவாக்கப்பட்ட காவல்படையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் , அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர். அதன் பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்த பட்டுள்ளதுடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அணிந்திருந்த சீருடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதன் செயற்பாடுகளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget