Ads (728x90)

யாழ்ப்பாணம் மாநகரின் மத்தியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இனங்காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை வியாழக்கிழமை தொடக்கம் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாநகர மத்தியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று கூடிய யாழ்ப்பாண மாவட்ட உயர்மட்டச் செயலணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டதில் அபாய நிலை இன்னும் நீங்கவில்லை. எனவே தற்போதைய நிலையில் பொது மக்கள் ஒன்று கூடலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget