Ads (728x90)

யாழ்.மாநகரில் நாளை தொடக்கம் மாநகர காவல்படை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பொது இடங்களில் சுகாதாரத்தை பேணாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் துப்புதல், கழிவுகளை கொட்டுதல் தடை. தண்டமும் விதிக்கப்படும். இதன்படி பொது இடங்களில் வெற்றிலை அல்லது உமிழ்நீர் துப்புவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டமும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் மாநகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு நடக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.  குறித்த நடவடிக்கையினை மாநகரசபையால் அமைக்கப்பட்ட மாநகர காவல்படை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்குமான செயற்பாட்டு கடமையில் காவல்படை ஊழியர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget