யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட காவல்படையின் சீருடை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்தது என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் சுமார் 06 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் இன்று இரவு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார்.
பொலிஸாரின் விளக்கமறியல் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி பிணை வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார். மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 சட்டத்தரணிகளுக்கு மேல் முன்னிலையாகியிருந்தனர்.

Post a Comment