கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment