நாட்டை மீண்டும் திறப்பது குறித்து அடுத்த சில நாட்களில் சிறப்புக் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ் நாட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்தை ஒக்ரோபர் 15ஆம் திகதியளவிலேயே ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எட்டப்படவுள்ளது.
இன்று சனிக்கிழமை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment