Ads (728x90)

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகள் நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

1-5 வரையிலான வகுப்புகள் முதலில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

200 இற்கும் குறைந்தளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை  ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர் அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget