Ads (728x90)

15-19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவை உடைய மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி  பணிப்புரை வழங்கியுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget