Ads (728x90)

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யா, சுந்தர் சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு, கோவை சரளா, மனோபாலா காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

Post a Comment

Recent News

Recent Posts Widget