Ads (728x90)

சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்காலத்தில் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளனர். நாளாந்தம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இது 15,000 முதல் 20,000 வரை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய வளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன பிசிஆர் பரிசோதனை கூடம் எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இப்பரிசோதனை கூடத்தில் தினமும் 7,000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களில் அவர்களுக்கு பரிசோதனை அறிக்கை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிசிஆர் பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் நோயாளி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் எந்த தடையுமின்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget