சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக பதவி விலகுமாறு இத்தாலிக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச பணித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் அதேவேளை ரத்வத்தேயை பதவி விலக்க வேண்டும் என்று அவருக்கு அறிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அரசியல் கைதிகள் இருவரை மண்டியிடவைத்து துப்பாக்கி காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment