Ads (728x90)

நான் சபாநாயகரை தொடர்புகொண்டு அவரிடம் முறையிட்ட பின்னர்தான் எங்களிற்கு இங்கு கதவு திறக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறானதாகயிருக்கும். இது நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களது உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கை. 

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன, அனுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகண பண்டாரவுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஆராய்வதற்காக சென்றிருந்தோம்.

சபாநாயகரின் அனுமதி பெற்ற பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைகளிற்கோ, பொலிஸ்நிலையங்களிற்கோ சென்று கைதிகளை பார்க்கமுடியும் என்ற சட்டம் வருமானால் அது இந்த நாட்டில் சட்டமொழுங்கு எவ்வளவு தூரம் சீர்குலைந்துள்ளது என்பதை இது வெளிப்படுத்தும்.

லொகான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

லொகான் ரத்வத்தை என்ற அமைச்சர் மதுபோதையில் வந்தார் துப்பாக்கியுடன் வந்தார் என அங்கே இருந்த சிறைக்கைதிகள் எங்களிற்கு நேரடியாக தெரிவித்தனர். அவர் மதுபோதையிலிருந்ததால் துப்பாக்கியை எடுத்து லோட் செய்து தன்முன்னால் நீட்டியதாக ஒரு சிறைக்கைதி தெரிவித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget