Ads (728x90)

செப்டெம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரித்தானியாவின் பயண சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுவதாக இலண்டனிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட 08 நாடுகளுக்கு இத்தடை நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, ஓமான், பங்களாதேஷ், கென்யா மற்றும் இலங்கை உள்ளிட்ட 08 நாடுகள் இவ்வாறு அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் பிரிட்டனுக்கு வரும் போது, ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞையின் அடிப்படையில் பிரிட்டனில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களின் அடிப்படையில் பயண பட்டியல் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget