இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பேரவையுடன் மாத்திரமல்ல ஐ.நா. உட்பட அதன் ஏனைய கிளை அமைப்புகளுடன் நாம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருகின்றோம். எதிர்காலத்திலும் இந்த நடைமுறை தொடரும். அதில் எவ்வித மாற்றமும் வராது. கொரோனாப் பரவலுக்கு மத்தியிலும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்தோம்.
இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடப்பாடு தேசிய நிறுவனங்களுக்கே இருக்கின்றது. அதற்கான பொறுப்பை நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கமாட்டோம். அவ்வாறு வழங்குவது அரசமைப்புக்கு முரணான செயலாகும் என்பதுடன் அரசியல் கட்டமைப்புக்கும் எதிரான நடவடிக்கையாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றது. சர்வதேச பொறிமுறையை உருவாக்கி சாட்சிகளைத் திரட்டி இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். சாட்சிகளின் தகவல் வெளியிடப்படாது. எந்த அடிப்படையில் சாட்சிகள் திரட்டப்படுகின்றன என்பதும் தெரியாது.
மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அணிசேரா நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தின. மனித உரிமை விவகாரத்தை உள்ளக பிரச்சினைகளில் பயன்படுத்தக்கூடாது எனவும் அவை சுட்டிக்காட்டின எனவுமர்.
Post a Comment