இது இன்று நள்ளிரவு முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதற்காக கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் முழுமையாக பூர்த்தி செய்து 14 நாட்கள் பூர்த்தி செய்திருப்பது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதுடன், அங்கு வைத்து அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
Post a Comment