Ads (728x90)

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அழகியல் பாடங்களுக்கு தோற்றிய மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு அனுமதிப்பதற்குத் தேவையான குறைந்தபட்சத் தகுதிகளைக் குறிப்பிட்டு சிறப்புச் சுற்றறிக்கை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று காலை கல்வி அமைச்சின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

இரண்டு சாதாரண சித்தி உட்பட ஐந்து சித்திகளுடன் அழகியல் பாடங்களுக்கு தோற்றிய மாணவர்கள் அழகியல் பாட பெறுபேறுகள் வெளியாகும் வரை உயர்தர வகுப்புகளில் சேர முடியும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் அழகியல் பாடங்களுக்கு தோற்றியிருந்தனர். அழகியல் பாடங்களின் செயல்முறைப் பரீட்சை நடத்தப்படாததால் அவற்றின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அழகியல் பாட செயல்முறைப் பரீட்சை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget