அடுத்த வாரம் நாடு மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு புதிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸின் டெல்ட்டா திரிபின் பரவல் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலமுறை நீடிக்கப்பட்டு செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment