Ads (728x90)

நாளை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பேருந்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே பஸ் போக்குவரத்து சேவைகளில் மக்கள் பயணிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget