தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு உரிய பிரதேச செயலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அல்லது இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அவசர தேவையின் அடிப்படையில், தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் மூலம் அல்லது பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு பிரிவின் மூலம் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கம் மூலம் முற்பதிவு செய்து நாளொன்றை பெறுவது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment