இப்பரிசோதனை கூடத்தை ஹொஸ்பினோம் நிறுவனம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன இணைந்து செயற்படுத்தவுள்ளன. ஹொஸ்பினோம் நிறுவனமானது ஜெர்மன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் தமது தாய் நிறுவனத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த பிசிஆர் பரிசோதனை கூடம் திறக்கப்பட்டுள்ளதுடன் மணிக்கு 500 பிசிஆர் பரிசோதனைகள் அறிக்கைகளை வெளியிட முடியுமென்றும், ஒருநாளில் 7,000 பிசிஆர் அறிக்கைகளை வெளியிடுவதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் இங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை ஆய்வக அறிக்கை, இங்கு 3 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்படும். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வீடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment